5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யக்கூடும் என கூறுகிறது. மதுரை,தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply