காஞ்சிபுரத்தில் யார் தாதா என்ற போட்டியில் நிதி நிறுவன உரிமையாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இதையடுத்து அடுத்ததாக யார் என்பதில் ஸ்ரீதரின் மைத்துனர் தணிக்கை என்பவருக்கும் ஓட்டுநர் தினேஷ் என்பவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மண்டைதீவில் நிதிநிறுவனம் நடத்தி வந்த ஸ்ரீதரின் பெரியப்பா மகன் கருணா ஒரு தரப்பிற்கு ஆதரவாக இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தன்னுடைய நிதி நிறுவனத்தில் கருணாவும் அவருடைய சகோதரன் திட்டியும் இருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 7 பேர் கொண்ட கும்பல் நிறுவனத்தின் உள்ளே நுழைந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளது.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனையடுத்து கொலை செய்த ஆயிரங்கள் மட்டுமே ஹெல்மெட்டுகளை போட்டுவிட்டு 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த வெற்றியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி.ய அவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் தாதா என்ற போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பேருந்தில் சென்ற சதீஷ்குமார் என்ற இளைஞரை ஒரு கும்பல் கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் தற்போது நிதி நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.