நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

இமானுவேல் சேகரன் 95வது பிறந்த நாளையொட்டி தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. இந்த முகாமை தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி பாண்டியன் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்தியாளரிடம் கூறியதாவது, தேவேந்திர குல ஏழு உட்பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொரு தேர்தலின்போது வாக்குறுதியாக முன்னிலைப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படாமல் போகிறது. இதனால் இக்கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் மட்டுமல்ல, இனிவரும் அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்கிறோம்.. மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கருப்பு கொடி கட்டி இடைத்தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என்றார்.


Leave a Reply