6 வயது சிறுமியை கொன்று நாடகமாடிய சித்தி கைது

சென்னை தாம்பரம் அருகே 6 வயது சிறுமி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் குழந்தையை கொன்று நாடகமாடிய சித்தியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் சக்ரபானி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். அவருக்கும் ஆறு வயதில் ராகவி என்ற பெண்குழந்தை இருந்துள்ளது இவரது முதல் மனைவி சரண்யா உயிரிழந்ததால் இரண்டாவதாக சூரியகலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

சூரியகலா விற்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென குழந்தை ராகவி காணாமல் போனதாக கூறி அவரின் சித்தி சூரியகலா அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடியுள்ளார். பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள புதரில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார் விசாரணையில் ராகவியின் சித்தி சூரியகலா நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

 

இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமி ராகவியை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply