சீன அதிபர் வருகை: சென்னை – மாமல்லபுரத்தில் போக்குவரத்து மாற்றம்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன் மாமல்லபுரம் வருவதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்கு பதிலாக ஈசிஆர் சாலையில் உள்ள கல்பாக்கத்தை அடுத்த பூஞ்சேரி பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாமல்லபுரத்தை பார்வையிடும் அக்டோபர் 11ஆம் தேதி மற்றும் 12-ம் தேதிகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

 

பயன்பாட்டிற்காக நான்கு சொகுசு கார்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளன இந்த சொகுசு கார்கள் இன்று பிற்பகல் விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளன.


Leave a Reply