மலைத்தேனீக்கள் கொட்டியதில் இளைஞர்கள் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ரங்க மலையில் உள்ள மகேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் கீழே இறங்கி வந்துள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் கூட்டில் இருந்து கலைந்த தேனீக்கள் பக்தர்களை விரட்டி சென்று கொட்டியுள்ளன.

 

இதில் கல்யாண வெங்கட்ராமன் பாலகுரு வாஞ்சிநாதன் மற்றும் கருணாகரன் ஆகியோர் தேனீக்கள் கொட்டியதில் படுகாயமடைந்துள்ளனர். வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு இளைஞர்கள் மோசமான நிலையில் உள்ளனர். மற்ற இருவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


Leave a Reply