இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நெல்லை விருதுநகர் தூத்துக்குடி கன்னியாகுமரி ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இடம் கனமழை பெய்தது குளுமையான சூழல் நிலவியது.


Leave a Reply