நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்

சில நொடி கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்தில் தாயும் மகளும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது 6 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

 

சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு நின்ற நிலையில் பள்ளி பேருந்து ஒன்று சாலையை கடந்தது. அப்போது சாலையின் ஒரு புறத்தில் கவனிக்காமல் சித்ரா கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சித்ராவும் அவரது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

ஒரு சில வினாடிகள் காத்திருந்து சாலையின் இருபக்கத்திலும் வாகனம் எதுவும் வராததை உறுதி செய்த பின்னர் சாலையை கடந்து இருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply