பங்கு சந்தை குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பங்கு சந்தை பயிற்சி மையம் துவக்கம் !!!

கோவையில் பங்கு சந்தை குறித்து இளம் கல்லூரி மாணவர்களும் அறிந்து கொள்ளும் விதமாக பங்கு சந்தை பயிற்சி மையம் துவங்கப்பட்டது.தற்போது பங்கு சந்தையில் வணிகம் செய்வது குறித்த ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கல்லூரியில் பயிலும் போதே பங்கு சந்தை முதலீடு மற்றும் அது குறித்த கூடுதல் தகவல்களை கல்லூரி மாணவர்கள் மற்றும் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக கோவை திருச்சி சாலையில் பங்கு சந்தை பயிற்சி மையம் துவங்கப்பட்டது.

தேசிய பங்கு சந்தை நிறுவனத்துடன் இணைந்து ஏ.சி.எஸ்.கேப்பிடல் மார்க்கெட் அகாடமி சார்பாக துவங்கப்பட்ட இதனை N S C யின் மண்டல தலைவர் கௌரி சங்கர் துவக்கி வைத்தார்.இதில் முதலீட்டாளர் கூட்டங்கள் மற்றும் முதுகலை பயிலும் மாணவர்களுக்கென கேபிடல் மார்க்கெட் குறித்த பயிற்சிகளை இந்த மையத்தின் வாயிலாக அளிக்க உள்ளதாக இதன் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விழாவின் ஒரு பகுதியாக ACS EMPOWERS YOU எனும் மொபைல் செயலியும் துவங்கப்பட்டது. விழாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள்,பங்கு சந்தை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply