திருவாரூரில் தப்பிய கொள்ளையனை விரட்டி பிடித்த எஸ்.ஐ
லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழுவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஒரேசமயத்தில் தமிழகத்தையே அதிர வைத்தனர். லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் அதிலும் ஜோக்கர் முகமூடிகளை அணிந்து வந்த அவர்கள் ஹாலிவுட் திரைப்பட பாணியில் திகில் ஊட்டினார் புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த வடமாநில கொள்ளையர்கள் கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில் திருவாரூரில் நடத்தப்பட்ட வாகன சோதனை இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

திருவாரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் பாரதி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காவல் துறையினரை பார்த்ததும் வந்த வழியாகவே தப்பிச் செல்ல முயன்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த உதவி ஆய்வாளர் வாழும் இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று ஒருவரை மடக்கிப் பிடித்தார் அந்த நபர் திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் அவரிடம் 5 கிலோ தங்க நகைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர் லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது தமிழகமே உற்றுநோக்கிய இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக உதவி ஆய்வாளர் பாரதம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன் இளங்கோ தலைமை காவலர்கள் காமராஜ் ரவி முதல் நிலை காவலர் சுந்தரம் காவலராகிய காவலர் குழுவினருக்கு ஐஜி வரதராஜ உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். துரிதமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் பாரதி நேருவை பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக பாராட்டி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




