கர்நாடகாவில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் இந்த கல்வி ஆண்டு முதலே ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய தொழில்நுட்ப குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கற்றுக் கொடுக்கப்பட்ட அவற்றை மாணவர்கள் எவ்வாறு கற்றுக் கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் எதையும் கற்றுக் கொள்ளாமல் மாணவர்கள் தேர்ச்சி பெறக் கூடாது என்பதற்காகவும் இந்த முறையை அறிமுகம் செய்வதாக அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை தீவிரமாக கருத்தில்கொள்ள பொதுத்தேர்வு வகைசெய்யும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரி கூறியுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கையால் கர்நாடகத்தின் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தாலும் அடுத்த வகுப்புக்கு முன்னேற தடையில்லை என்ற விதி கைவிடப்படுகிறது.






