வேலை கொடுத்த முதலாளி வீட்டில் இளைஞர் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல்

சென்னை வேளச்சேரியில் வேலை கொடுத்த உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர் வேளச்சேரி காமராஜர் அதை சேர்ந்த போஸ் என்பவர் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மணி என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மதுரை மணி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு இதைக் கண்ட போஸ் அவரை விலக்கிவிட்டு ஊழியர் மணியை கண்டித்துள்ளார்.

 

உரிமையாளர் தனக்கு சாதகமாக பேசவில்லையே என்று ஆத்திரத்தில் இருந்த மணி கடந்த 4 நாட்களாக வேலைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. ஆத்திரமுற்ற மணி இன்று அதிகாலை போஸின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பற்றி புகை அதிகமாகவே விழித்துக்கொண்ட போஸ் மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணியை தேடி வருகின்றனர்.


Leave a Reply