வாணியம்பாடி அருகே பிடிபட்ட மலைப்பாம்பிற்கு ஆரத்தி எடுத்த கிராம மக்கள்
வாணியம்பாடி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் ஊராட்சியில் நசீர் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்பில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு கோடியை கடந்து செல்வதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

இதனையடுத்து பாம்புகளை பிடிக்கும் இளைஞரை வர வைத்து அதை பிடித்தனர். மீண்டும் மலைப்பாம்பு ஊருக்குள் வரக்கூடாது என வேண்டி அதற்கு ஆரத்தி எடுத்து கிராம மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர். இதையடுத்து மலைப்பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர்கள் அருகிலுள்ள காப்பகத்திற்கு கொண்டு சென்று விடுவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




