தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக வடக்கு தமிழகத்தின் மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இதுபோல தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஆயக்குடி பகுதியில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்குமெனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply