அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி புளியந்தோப்பை சேர்ந்த ஐயப்பன் தனது பிறந்தநாளை நண்பர்கள் சரத்குமார் சாமுண்டீஸ்வரி அவருடன் கொண்டாடியுள்ளார். அப்போது அரிவாளால். கேக் வெட்டியுள்ளார்.

 

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி ஊழியர் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் விசாரணை நடத்தியபோது அரிவாளால் கேக் வெட்டிய நபர்களை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 

இதனையடுத்து ஐயப்பன் சாமுண்டீஸ்வரி சரத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த விக்கியை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply