திருமணமாகாத ஏக்கத்தில் காவலர் விஷம் அருந்தி தற்கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திருமணமாகாத இயக்கத்தில் ஆயுதப்படை காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் ராஜேஷ்குமார் இவர் உளுந்தூர்பேட்டையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில வருடமாக திருமணத்திற்காக பெண் பார்க்க சென்ற போதெல்லாம் இவருக்கு நாகதோஷம் உள்ளதாக கூறி சில பெண்கள் பெண் கொடுக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது.

 

இதனால் விரக்தியில் இருந்த ராஜேஷ் குமார் நேற்று இரவு வீட்டில் இருந்த மதுபானத்தில் வயலுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். காலையில் ராஜேஷ்குமார் எழுப்புவதற்காக அவரது தந்தை அழைத்து சென்றபோது வாயில் நுரை தள்ளியபடி ராஜேஷ்குமார் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply