சீனாவில் புதிதாக பிறந்துள்ள பாண்டா கரடி குட்டி

தேசிய தின கொண்டாட்டத்தை நினைவு கூறும் வகையில் சீனாவில் புதிதாக பிறந்துள்ள பாண்டா கரடி குட்டிக்கு கியூ கிங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனாவின் தெற்கு மாகாணமான விலங்கியல் பூங்காவில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பாண்டா கரடி குட்டி பிறந்தது. சீனாவின் மிகப்பெரிய வளமாக பாண்டா கரடிகள் கருதப்படுகிறது.

 

இந்நிலையில் தேசிய தினத்தில் முந்தைய தினம் புதிய பாண்டா கரடி பிறந்ததால் அந்த குட்டிக்கு தேசிய தினக் கொண்டாட்டத்தை கவுரவிக்கும் விதமாக கியூகிங் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. கியூ கிங் என்றால் தேசிய கொண்டாட்டம் என்று அர்த்தம் என கூறும் பூங்கா அதிகாரிகள் அதன் அருகிலேயே இருக்க வைத்து பராமரித்து வருகின்றனர்.


Leave a Reply