திருவாடானையில் ரிலையன்ஸ் பவுண்டேசன் விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் ரிலையன்ஸ் பவுண்டேசன், தமிழக ஊரக வளர்ச்சி துறை, மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து தூய்மையே சேவை 2019 என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் ரிலையன்ஸ் பவுண்டேஷன், தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து தூய்மையே சேவை இயக்கம் 2019 பற்றிய விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவ மாணவிகளை கொண்டு நடைபெற்றது.

இந்த பேரணி திருவாடானை அரசு கலை மற்றும் ‘அறிவியல் கல்லூரியில் இருந்து தொடங்கி நான்கு வீதிகளின் வழியாக வந்து தனியார் மஹாலில் தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது இந்த பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




