ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை – முடிவை வெளியிட இடைக்காலத் தடை

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரை திமுக சார்பில் அப்பாவு ஆகியோர் போட்டியிட்டனர். இது தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தபால் மூலம் பதிவான 201 வாக்குகளை அதிகாரிகள் எண்ணவிலை என்று குறிப்பிட்டிருந்தார்.

 

19,20 மற்றும் 21 ஆவது சுற்றுகளை என்னும் போது காவல்துறையினர் தங்களை வெளியேற்றி விட்டனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தபால் வாக்குகள் மற்றும் மூன்று சுற்று வாக்குகளின் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

 

இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் எம்எல்ஏ இன்பதுரை அவசர மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் என்பது துறையின் வழக்கு 64ஆவது எண்ணாக பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது. மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

 

ஆனால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட வருகிற 23-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இது குறித்து விளக்கம் அளிக்க அப்பாவுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Leave a Reply