நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பீகார் மாநில காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர் பட்டியலினத்தவர் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறி மணிரத்னம், சௌமியா பிடித்த 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினார்.
இதுதொடர்பாக பீகார் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த பீகார் தலைமை மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை அடுத்து அந்த 49 பேர் மீதும் முசாபர்பூர் காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.