நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் ரூ.4.6 ரொக்கப்பணம் பறிமுதல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் திட்டத்தில் தற்போது வரை 37 லட்சத்து 73 ஆயிரம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

 

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து சத்யபிரதா சாகு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளில் தற்போதுவரை 4 லட்சத்து கார் ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 9 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 7346 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 3 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


Leave a Reply