இனி கூகுள் மேப்பில் பொதுக் கழிப்பிடங்களை தேடலாம்

கூகுள் வரைபடத்தில் இனி பொது கழிப்பிடங்கள் சுட்டிக்காட்டப்படும் என கூகுள் மேப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கூகுள் வரைபடத்தில் பொது கழிப்பிடங்களை பட்டியலிடும் திட்டம் டெல்லி, போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் 2016ஆம் ஆண்டு சோதனையின் அடிப்படையில் தொடங்கப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது 2306 மேற்பட்ட நகரங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிவறைகளை கூகுள் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. மேலும் கூகுள் வரைபடத்தில் பப்ளிக் டாய்லெட் நியர் மீ என டைப் செய்தால் அருகில் உள்ள பொது கழிப்பிடங்கள் சுட்டிக்காட்டப்படும் எனவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.


Leave a Reply