பெற்ற தாயை வீதியில் வீசிய கொடூர மகன்கள்.!

ஜெயங்கொண்டம் அருகே பெற்ற தாயை கொடூர மனம் படைத்த மகன்கள் சாலையில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் பட்டம்மாள். 95 வயதான மூதாட்டியின் கணவர் இறந்து விட்ட நிலையில் மகன்களுடன் வசித்து வந்தார். இவருக்கு ஸ்வீட் கடை நடத்தி வரும் சண்முகம் ஓய்வு பெற்ற ஆசிரியரான சதாசிவம் என்ற 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

 

உடல்நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தனித்தனியே வசித்துவரும் மகன்கள் இருவரும் சரியாக கவனிக்காததால் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதியோர் இல்லம் சேர்த்து வந்துள்ளார். அங்கு மகனை பார்ப்பதற்காக மீண்டும் வீட்டிற்கு வந்த மூதாட்டி பட்ட மகன்கள் இருவரும் துரத்துகின்றனர். இதன்பின் மகள் சகுந்தலாவின் வீட்டிற்கு மூதாட்டி சென்றுள்ளார்.

 

தாயை சிலநாட்கள் வைத்திருந்த மகள் சகுந்தலா மீண்டும் சகோதரர் சண்முகத்தின் வீட்டுத் திண்ணையில் கொண்டுபோய் போட்டு விட்டு வந்துள்ளார். ஆத்திரமடைந்த சண்முகம் மற்றொரு மகனான சதாசிவம் வீட்டு வாசலில் மூதாட்டி பட்ட மாலை போட்டு விட்டு வந்துள்ளார்.

 

இதனையடுத்து சதாசிவம் தாய் பட்ட மாலை சாலையில் வீசி சென்ற அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனவே இரு மகன்கள் மீதும் பொதுமக்கள் ஜெயம்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வழக்கு பதிவு செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply