ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு சவூதி அரேபியா ஆதரவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவிற்கு சென்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சவுதி அரேபிய இளவரசர் முகமது சல்மான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை சந்தித்து பேசினார்.

 

சவுதி இளவரசருடன் சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இளவரசர் விடுத்துள்ள அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகள் அணுகுமுறைகளை புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

சவுதி அரேபியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி எடுத்து வந்தார். அதன் விளைவாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு அந்த நாடு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.


Leave a Reply