மதுரையில் நகலெடுக்கும் கடையில் வைத்து உரிய அனுமதியின்றி இரத்தப்பரிசோதனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள தெற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு ஏராளமானோர் ஓட்டுநர் உரிமம் பெற வருகின்றனர். அவர் சான்றிதழ் பெற அருகில் உள்ள நகலெடுக்கும் கடையில் இயங்கும் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் ரத்தப்பரிசோதனை செய்யும் நிலையம் உள்ளது.
ஆனால் அந்த நிலையம் உரிய அனுமதி இன்றி இயங்குவதாக புகார் கூறப்படுகிறது .இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவ இயக்குனர் அர்ஜுனன் குமார் உரிய பாதுகாப்பின்று இரத்த மாதிரிகள் எடுப்பது முற்றிலும் தவறு என்று குறிப்பிட்டுள்ளார். புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் பின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.