போலி மருத்துவர் இர்ஃபானின் தந்தை கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது சஃபி போலி மருத்துவர் என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. நீட் தேர்வு நிகழ்ந்த ஆள்மாறாட்டம் அம்பலப்படுத்த பட்ட நிலையில் மாணவர் உதித் சூர்யாவை தொடர்ந்து மேலும் பலர் சிக்கியுள்ளனர். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த இருப்பினும் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.

 

சான்றிதழ் சரிபார்ப்புக்கு இருப்பான் ஒத்துழைக்காததால் அவரது தந்தையை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மாணவர் நேற்று சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி நாளை சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

 

இர்பான் முகமது சபி இடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ படிப்பை பாதிலேயே கைவிட்ட முகமது சபி வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூரில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். மருத்துவம் படிக்காமல் பல ஆண்டுகளாக பலருக்கு அவர் சிகிச்சை அளித்தது தெரியவந்துள்ளது.

 

இதனிடையே மாணவன் விவகாரத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கோவிந்தராஜ் என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரத்தில் ஊத்தங்கரை சேர்ந்த வேதாசலம் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.


Leave a Reply