வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் வீட்டில் இருந்தபடியே சீட் கவர் ஸ்கூல் பேக் ஆகியவற்றை தயக்கம் தொழில் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டுக்கு அருகாமையில் வசித்து வரும் பள்ளி சிறுமி ஸ்கூல் பேக் கிடைப்பதற்கு இவரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளான். இதுகுறித்து சிறுமிக்கு எதுவும் தெரியாததால் அமைதியாக இருந்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட சம்பத் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும் நடந்ததை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதால் தனது பெற்றோரிடம் எதுவும் கூறாமல் சிறுமி மறைத்துள்ளார்.
இந்த நிலைமையில் சிறுமிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர்களது பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு நடந்தவற்றை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சம்பத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.