சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே மூன்று மாதமே ஆன ஆண் குழந்தை மீட்பு

சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே கடந்த 3 மாதமே ஆன ஆண் குழந்தையை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று அதிகாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரயில் நிலையத்தில் தென் பகுதியில் பிறந்து மூன்று மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று ஸ்வெட்டர் அணிந்த நிலையில் ஆதரவற்று கிடந்தது.

 

அந்த குழந்தையை மீட்ட போலீசார் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சங்கரன்கோவில் டவுன் காவல் நிலைய போலீசார் குழந்தையை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply