பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்த பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி பாதுகாப்பு செயலாளர் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
என்றார் எல்லை தாண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கொடிய பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் மறைத்து வைத்திருக்கிறது என்று அவர் கூறினார். சீனா அந்த வகையான மோதலை விரும்புகிறது என்றோ அல்லது ஆதரிக்கும் என்றோ கருதவில்லை என்று கூறிய அவர் பெரும்பாலும் ராஜதந்திர மற்றும் அரசியல் ஆதரவு நிலைப்பாட்டை தான் சீனா எடுக்கும் என்றார்.
சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை சீன ஆதரிப்பதாக கூறியவை சுட்டிக் காட்டியவர் ஆனால் அதையும் மீறி வேறு எந்த முடிவையும் சீனா எடுக்காது என்று அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ள சீனா இந்தியாவுடன் வளர்ந்து வரும் போட்டியை கருத்தில் கொண்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.