வாட்ஸ்அப் குழுவில் அனுப்பிய செய்தி சில நொடிகளில் தாமாக அளிக்க வைக்கக்கூடிய வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உலகில் பலரும் பயன்படுத்தும் உடனடி குறுஞ்செய்தி பரிமாற்ற சேவையான வாட்ஸப் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அவ்வப்போது புதிய மேம்பாடுகளை வழங்கிவருகிறது.
ஏற்கனவே அனுப்பிய செய்தியை நீக்கும் வசதியும் உள்ளது. இந்நிலையில் ஒரு வாட்ஸ்அப் குழுவில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி எத்தனை நேரத்திற்கு திரையில் தோன்ற வேண்டும் என்பதையும் அனுப்பியவரை தீர்மானிக்கும் வகையில் புதிய வசதியை சோதிக்கப் படுவதாக கூறப்படுகிறது.
அதில் ஐந்து வினாடிகள் அல்லது ஒரு மணி நேரம் வரை அந்த குழுவில் தோன்ற வேண்டும் என முன்கூட்டியே செட்டிங் செய்து அனுப்பும் நபர் தீர்மானித்துக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. அந்த செய்தி நீக்கப்பட்டுவிட்டது என்று தகவல் கூட குழுவில் இடம் பெறாது என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.