நாடெங்கும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் தலைவர்கள்

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா நாடெங்கிலும் இன்று கொண்டாடப்படுகிறது. காந்திஜியின் பிறந்தநாளையொட்டி தலைநகர் டெல்லியிலும் அவர் பிறந்த குஜராத் மாநிலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. டெல்லியில் ராஜ்காட்டில் இருக்கும் காந்தி சமாதி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதைத்தொடர்ந்து குஜராத்திற்கு செல்லும் பிரதமர் அங்கு காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து நாட்டை திறந்தவெளி கழிப்பிடங்கள் அற்றதாக அவர் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம தலைவர்கள் நீதிபதிகள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளில் அவர் போதித்த உண்மை அகிம்சை எளிமை நல்லிணக்கம் ஆகியவற்றை பின்பற்ற மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேச பிதாவே 150-ஆவது பிறந்த நாளையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார். இதில் மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் அறியப்பட்ட நபர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பின்பற்றிய பல வழிகள் உலகிற்கே ஒரு முன்னுதாரணமாக இருந்து வருவதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஒற்றுமை மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான பாதையாக மகாத்மா காற்று சென்றிருப்பதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார். காந்திஜியின் பிறந்த நாளை பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சிறப்பான முறையில் கொண்டாட உள்ளன.

காந்தி சங்கல்ப யாத்திரை என்று நிகழ்ச்சியை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் நான்கு மாதங்களுக்கு நடைபெறும் கூட்டங்களில் பாஜகவின் மூத்த தலைவர்கள் காந்தியின் தூய்மை எளிமை கொள்கைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். பாஜகவுக்கு நாடு முழுவதும் உள்ள 3229 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாத்திரையில் கலந்து கொண்டு மக்களை சந்திக்க உள்ளனர்.

காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியும் ஒருவார கால நிகழ்ச்சிகளை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பாதயாத்திரையாக சென்று காந்தியின் கொள்கைகள் அவசியம் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க உள்ளார்.


Leave a Reply