ஓய்வு பெறும் நாளில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்!

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் நந்தகோபால் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் 30-09-2019 அன்று பணி ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில், அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக பேரூராட்சிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் செயல் அலுவலராக கடந்த 2011 முதல் 2016 ஆண்டு வரை நந்தகோபால் பணியாற்றி வந்தார்.

 

அப்போது அங்கீகாரம் இல்லாத இடத்தில் வீடு கட்டியவர்களுக்கு வரி விதித்ததுடன் கட்டடம் கட்ட அனுமதி வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக செயல் அலுவலர் நந்தகோபால் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.

 

இந்நிலையில் பணி ஓய்வுக்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில் நந்தகோபால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

மேலும் இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி (பொறுப்பு) செயல் அலுவலராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply