திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல ஏரியை காணவில்லை என்று கூறி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளனர். தேகோபுராபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் விருத்தாச்சலம் தாசில்தாரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கோபுராபுரம் பகுதியிலுள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாகவும் ஏரியை அளவீடு செய்து அதனை தூர்வாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்டு தாசில்தார் கவியரசு ஏரியை மீட்டதாக உறுதியளித்தார்.