நீர் நிலைகளில் பொதுப்பணித் துறையினரால் அதிகம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் குளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் திருவாரூர் மாவட்டத்தில் கண்டரமாணிக்கம் ஸ்ரீவாஞ்சியம் செங்கனூர் கிராமங்களில் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க ஆணையிட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குடிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்காதீர்
