பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு : மாமல்லபுரத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாமல்லபுரத்திற்கு செல்கிறார். இந்தியா வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் புராணங்கள் நிறைந்திருக்கும் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சந்திப்பின்போது இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

 

இரு நாட்டு தலைவர்களின் வருகையை முன்னிட்டு சீன அதிகாரிகள் குழு மத்திய அரசு அதிகாரிகள் குழு மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மாமல்லபுரத்தில் ஏற்கனவே பலமுறை ஆய்வு நடத்தியுள்ளனர். இதனிடையே மாமல்லபுரத்தில் உள்ள புராணங்களில் போர்க்கால அடிப்படையில் தார் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையோர கடைகள் அகற்றப்படுகின்றன இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.

 

கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களில் அவர் ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மாமல்லபுரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்துகிறார். இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருப்பதால் மாமல்லபுரம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறது.


Leave a Reply