காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு வளையலணி விழா

சென்னையில் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு விழா நடத்தி மகிழ்ந்தனர். திருவல்லிக்கேணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் அடுத்த மாதத்திலிருந்து மகப்பேறு விடுமுறையில் செல்ல உள்ள நிலையில் அவருக்கு காவல் நிலையத்திலேயே பெண் காவலர்கள் இணைந்து வளைகாப்பு விழா நடத்தினர்.

 

குடும்பத்தினர் செய்வதுபோல கர்ப்பிணி பெண்ணிற்கு சீர்செய்து வளையல் அணிவித்து சாதங்கள் செய்த பெண் காவலர்கள் உபசரித்தனர்.


Leave a Reply