உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க கிராம மக்கள் சாலை மறியல்

உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அனல் மின் நிலையம் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

 

இந்நிலை தண்ணீர் தேவைக்காக கடலில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாலம் அமைத்து அதில் குழாய் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மீனவ கிராம மக்களை அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தங்களது படகுகளை எடுத்துச் செல்வதில் சிரமம் இருப்பதாகவும் கூறி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் உப்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை தீர்மானமாக நிறைவேற்ற கோரிக்கை வைத்த நிலையில் அதனால் மாலை 5 மணி வரை கிராம சபா கூட்டம் முடியடையவில்லை. உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தீர்மானத்தை பதிவு செய்யாததால் ஆத்திரமுற்ற 70 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட மக்கள் தேசிய நெடுஞ்சாலையான கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர் .

 

அதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போக்கு வரத்து மாற்றும் பாதையில் திருப்பி விடப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரச செய்ததால் மறியல் கைவிடபட்டது.


Leave a Reply