--- --:--:-- --
FB_IMG_1564640804848

மத்திய பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குறி வைத்து ஆபாச வீடியோ எடுத்த கும்பல் மாணவிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அம்பலமாகியுள்ளது. உதடு, மூக்கு கண்ணாடி, லிப்ஸ்டிக் போன்றவற்றில் கேமராக்களை பொருத்தி வீடியோ எடுத்ததும் தெரியவந்துள்ளது. நான்காயிரம் செக்ஸ் வீடியோக்கள் 60க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், சிக்கலில் உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்துக் கொண்டிருக்கிறது மத்தியபிரதேச பாலியல் வழக்கு.

 

பாலியல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பல கோடி ரூபாய் கேட்டு கும்பலொன்று மிரட்டுவதாக இந்த ஊரைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கிய காவல்துறையினர் ஸ்வேதா என்ற பெண் உள்பட 6 பேரை கைது செய்தனர். ஸ்வேதா இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என்பது காவல்துறையினர் அளிக்கும் தகவல். ஸ்வேதாவிடம் விசாரணை மேற்கொண்ட போது காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்துள்ளன.

ஸ்வேதாவிடம் இருந்து மட்டும் நான்காயிரம் ஆபாச வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர் காவல்துறையினர். அதில் சிக்கிக் கொண்ட வரும் அத்தனை பேரும் தீவுகள் பாலியல் தொழிலில் ஈடுபடும் 40க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கல்லூரி பெண்களை கைவசம் வைத்துக்கொண்டு விபச்சார தொழிலை மேற்கொண்டு வந்த ஸ்வேதாவிடம் மாநிலத்தின் முக்கிய புள்ளிகள் சிக்கியுள்ளனர். அவர்களை வைத்து பணம் சம்பாதிப்பது என முடிவு செய்த அவர் பெண்களை அனுப்பி வைத்து அவற்றை விரிவாக பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். அந்த வீடியோக்களை கொண்டு மிரட்டி பணம் பறித்து ஒரு சில மாதங்களில் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார்.

அதோடு சமூகம் மற்றும் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளார். ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம், அரசு காண்ட்ராக்ட் என ஆதிக்க சக்தியாக வளர்ந்துள்ளது. இந்த கும்பல் பெரும்பாலும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவிகளை மூளைச்சலவை செய்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது. விசாரணையில் தெரியவந்துள்ளது ஸ்வேதாவின் கடையில் 12 அரசு உயரதிகாரிகள் எட்டு முன்னாள் மாநில அமைச்சர்களும் சிக்கியுள்ளனர். இவர்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக வை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon