பிரதமரிடம் இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டதாக வெளியான தகவல் தவறானது

பிரதமர் மோடியுடன் இடைத் தேர்தலுக்கு ஆதரவு கேட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானது என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த நகரில் துணைக்கோள் நகரை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் துணைக்கோள் நகரத்தில் கட்டப்படும் குடியிருப்புகள் அனைத்தும் ஏழைகளுக்கு வெளிப்படையான விலையில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணியை தற்போதும் தொடர்வதாகவும் ஓ பன்னீர்செல்வம் கூறினார். மேலும் சென்னை வந்த மோடியிடம் இடைத்தேர்தலுக்கான ஆதரவு கேட்டதாக ஊடகத்தில் வெளியான தகவல் தவறு என்றும் பிரதமரிடம் அரசியல் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசால் தமிழ் ஒருபோதும் புறக்கணிக்க படவில்லை என்றும் ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.


Leave a Reply