பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கத்தால் 38 பேர் உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இப்பகுதிகளில் கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்தன. சாலை போன்ற உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
38 பேர் உயிரிழந்ததுடன் 700 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் அதே பகுதியில் 12 மீட்டர் ஆழத்தில் 4.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு பதற்றத்தோடு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இஸ்லாமாபாத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. முந்தைய நிலநடுக்கத்தில் ஏற்கனவே எரிச்சலாகி பலவீனமான கட்டடங்களில் தற்போது நிலநடுக்கம் இடிபாடுகளில் ஏற்படுத்தியுள்ளது அது சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




