மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்

திருச்சியில் மது அருந்த பணம் கொடுக்காததால் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். ராம்ஜிநகர் பின்காலனிய பகுதியில் வசித்து வந்தவர் சாந்தி இவருடைய மகன் குமாரவேலு மனைவியுடன் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான இவர் தனியார் டைல்ஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

குடிபோதைக்கு அடிமையான குமரவேல் மனைவியின் நகைகளை அடகு வைத்து குடித்து தீர்ப்பதோடு குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தாய் சார்ந்த இடம் மது அருந்த குமரவேல் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுக்கவே இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நீண்ட நேரம் எடுத்துள்ளது.

 

இதனால் கோபமடைந்த குமரவேல் தாயென்றும் பாராமல் நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தாயின் கழுத்தை நெறித்து தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளார். தலைமறைவாக உள்ள குமரவேலு போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply