விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வீரமணி கோபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் என்று செல்வக்கனி அரசு பேருந்து ஓட்டுநரான இவர் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் உறவினர் உதவியுடன் அங்கு வேலை வாங்கி தருவதாக நண்பர்களிடம் கூறியுள்ளார்.

 

இந்த செய்தி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்த சேது ராமலிங்கம் என்ற இளைஞரின் காதுகளை எட்டியது. அதனை நம்பிய அந்த இளைஞர் தனது அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு சென்று செல்வதை அணுகியுள்ளார். அப்போது வேலைக்காக பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறிய செல்வகனி முதற்கட்டமாக 4 லட்சம் ரூபாய் கேட்டதாக தெரிகிறது.

அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணத்தை கொடுத்துள்ளார் சேதுராமலிங்கம். அதை பெற்றுக்கொண்ட செல்வகணி பணிக்கான ஆணை விரைவில் வந்துவிடும் என்றும் பிறகு மீதி பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் பணிக்கான ஆணை வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சேதுராமலிங்கம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி செல்வியிடம் பலமுறை கேட்டும் கிடைத்தபாடில்லை.

 

இதையடுத்து நெல்லை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது தான் அவர் இதே பாணியில் 19 பேரை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply