திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறக்கூடிய முதல் பொதுக்குழுக் கூட்டம் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாங்குநேரிக்கும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து திமுகவின் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுகவின் கட்சி தலைமை அறிவித்திருக்கிறது.

 

திமுகவின் முதன்மை செயலாளர் டி ஆர் பாலு, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியவை அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். வரக்கூடிய ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. அதற்கான பந்தல் ஏற்பாடுகள் எல்லாம் கூட செய்யப்பட்டு வந்தது உடனடியாக அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply