வங்கிகள் இணைப்பை கண்டித்து வரும் 26,27ம் தேதிகளில் வேலைநிறுத்தம்:சேகரன்

வங்கிகள் இணைப்பை கண்டித்து வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக இயங்கும் என சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த அறிவிப்பைக் கண்டித்து வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்த அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் தனியார் வங்கிகளுக்கு சாதகமான நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.


Leave a Reply