இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்க கூட்டமைப்பு (கிரடாய்) சார்பில், ‘பேர்புரோ-2019’ எனும் மூன்று நாள் வீட்டு கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் துவங்கியது.ஒரே கூரையின் கீழ் வீடு, நிலம் வாங்குவோர், விற்போர் பயன்பெறும் வகையில் கிரடாய் அமைப்பு சார்பாக பேர்புரோ கண்காட்சி கோவையில் இன்று துவங்கியது.மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில் கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத்,மற்றும் கிரடாய் அமைப்பின் தலைவர் சுரேந்தர் விட்டல்,கண்காட்சியின் தலைவர் அபிஷேக் மற்றும் சமூக ஆர்வலர் அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியினை துவக்கி வைத்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கட்டுமானத்துறையில் தமிழகத்தில் கோவை மாவட்டம் முன் மாதிரியாக இருப்பதாகவும், தொழில் வளர்ச்சிக்கு கட்டுமானத் துறையினரின் பங்கு வகிப்பதாக தெரிவித்த அவர், சுற்றுச்சூழல் மாசுபாடு பாதிக்காத வகையிலும் கட்டுமானத் துறையினர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டு கொண்டார். கண்காட்சியில், 35க்கும் மேற்பட்ட கட்டுமான, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்கிற்றுள்ளன.
கண்காட்சியில் முதன்முதலாக பங்கு பெற்ற சென்னையை சேர்ந்த எஸ்.பி.ஆர்.கட்டுமான நிறுவனத்தின் அருண்குமார் மற்றும் பீட்டர் ஜோசப் ஆகியோர் பேசுகையில் வீடு கட்ட திட்டமிடுபவர்கள், வீட்டுக்கடன் பெறுவது, அரசு மானியம் பெறுதல் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,பொருளாதார பின்னடைவில் கட டுமான துறைக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை எனவும்,வீட்டுக்கடன் மீதான வட்டி குறைந்துள்ளதால், பொதுமக்கள் அதிக ஆர்வம் காண்பிப்பார்கள் வரும் காலங்களில் கட்டுமான துறை பெரிய அளவில் வளர்ச்சி காணும் என அவர் தெரிவித்தார்.