திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஐடி ரெய்டு

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் ஆட்சியர் வளாகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கக்கூடிய கனிமவள அலுவலகத்தில்தான் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

 

மணல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகவும் அதனை எடுத்து எழுந்த புகாரின் பேரில் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் மூன்று மாதங்களுக்கு முன்பே மணல் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஒரு புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 

அந்த விசாரணை அடிப்படையில் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. மீண்டும் தற்போது அந்த சோதனை நடைபெற்று வருகிறது ஏனென்றால் மணல் விவகாரத்தில் கனிமவளத் துறை அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று புகார் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் குவாரியில் மணல் எடுப்பதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் விவகாரத்தில் உறுதுணையாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் தற்போது சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply