ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகர்கள் உடனான மாநில கலந்தாய்வு கூட்டம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காமராஜ் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் இணையும்போது எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எளிதான நடைமுறை சிக்கலும் இல்லை என கூறிய அவர் இதன்மூலம் மாநில அரசுக்கு நிதி சுமையும் ஏற்படாது என குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




