கோவையில் வட மாநில இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்

கோவையில் வட மாநில இளைஞர் தங்கியிருந்த வீட்டிலிருந்து இரண்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வடமாநில இளைஞர் ஒருவர் தங்கியிருந்த வீட்டில் துருப்பிடித்த நிலையில் சுமார் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள துப்பாக்கியை போலீசார் கண்டுபிடித்து ஆய்வாளர் செந்தில்குமார் ஒப்படைத்தனர்.

 

இதுகுறித்து கடந்த இரண்டு நாட்களாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் இருந்ததால் செந்தில்குமார் இடம் ஆணையாளர் விசாரணை நடத்தினார். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவானிசிங் தங்கியிருந்த அறையில் இருந்து சுமார் 13 அங்குல நீளமுள்ள மற்றொரு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

 

சுமார் 15 ஆண்டுகளாக கோவையின் அதே பகுதியில் தங்கி இருந்ததும் கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தான் திரும்பியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Leave a Reply