அரியலூர் கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 40க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து வெள்ளத்தில் சிக்கினர்.
இவர்களில் 39 பேர் கரையோர இளைஞர்கள் உள்ளிட்டோரின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. படகு விபத்தில் சிக்கிய ராணி, பழனிச்சா,மி சுயம்புலிங்கம் ஆகிய மூன்று பேர் காணாமல் போயினர். இந்நிலையில் கொள்ளிடம் பாலத்தில் பெண்ணின் உடல் மிதந்து செல்வது கண்டறியப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மிதந்து கொண்டிருந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட பெண் ராணி என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரது உடல் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.