திமுக நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது ! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

திமுகவினர் பேனர்கள் கட்டவுட் பிளக்ஸ் போர்டு வைக்க கூடாது என முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். பேனர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளையும் கண்டனங்களையும் தெரிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஸ்டாலின் தொண்டர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

 

பிளக்ஸ் போர்டுகள் பேனர்கள் வைக்கக்கூடாது என தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் குறிப்பாக முழுக்கமுழுக்க பேனர்கள் கட் அவுட்டுகள் தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் பெரிய அளவிலான போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடிய எவ்வித தடுப்புகளையும் வைக்கக் கூடாது என அறிவுறுத்தி இருந்தார்.

 

அதை நினைவூட்ட கூடிய வகையில் இந்த அறிக்கையை அவர் பதிவிட்டு இருக்கிறார். சுபஸ்ரீ என்ற பெண் பலியாகி இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்திருக்கும் அவர் திமுக பொதுக் கூட்டங்கள் நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு இடையூறு கொடுக்கக்கூடிய வகையில் பேனர்கள் வைக்க கூடாது என ஏற்கனவே பலமுறை அறிவுறுத்து எழுதியிருப்பதை நினைவூட்டி இருக்கும் ஸ்டாலின் இது போன்ற பேனர்களுக்கு அனுமதி அளித்த பிறகு பாதுகாப்பாக வைக்கலாமே தவிர வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சல் அளிக்கக்கூடிய வகையில் வைக்கக்கூடாது என தெரிவித்திருக்கிறார்.


Leave a Reply